விவசாயிகள் புகார் அளித்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை : அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
14 ஜூலை 2022, 3:46 மணி
Quick Share

தஞ்சை : விவசாயிகள் புகார் அளிக்கும் பட்சத்தில் முறைகேட்டில் ஈடுபடு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். நேற்று திருவாரூர் மற்றும் தஞ்சையில் ஆய்வு கூட்டம் நடத்திய அவர், இன்று தஞ்சையில் ரேஷன் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தார்.

பின்னர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியின் 3 சாவிகளும் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தால் யார் முறைகேட்டில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 661

    0

    0