கரூருக்கு விரைவில் விமான நிலையம் : மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

20 July 2021, 9:12 pm
senthil balaji - updatenews360
Quick Share

கரூர் : முதல்வர் உத்திரவிற்கிணங்க கரூருக்கு விரைவில் விமான நிலையம் வந்து விடும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஒருங்கினைந்த ஜவுளி பூங்கா வளாகத்தில் கரூர் மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் காந்தி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தறி மற்றும் ஜவுளி துறை அணையர் பீலாராஜேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் காந்தி பேசியதாவது ;- கடந்த 2011 தொடங்கப்பட்ட இந்த பூங்கா கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஐ.டி பார்க்கு இணையாக இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்று அனைத்து துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பதவி ஏற்ற சில நாட்களிலேயே துறையில் நடைபெறும் குறைகளை கேட்டு, நடவடிக்கைகள் எடுக்க சொன்னார் முதல்வர்.

டெக்ஸ்டைல்ஸ் 450 கோடி வர்த்தகம், 4500 பேர் தொழிலில் நேரடியாக ஈடுபட்டு, ஒன்றரை லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். நிச்சயமாக எந்த கோரிக்கையாக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கலைஞர் ஆட்சியிலும் சரி, தற்பொழுதும் ஸ்டாலின் ஆட்சியிலும் சரி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தொழில் வளர்ச்சி என்ன தேவை என்பதை தெரிந்து வைத்துள்ளார் முதல்வர். கலைஞர், அண்ணாவை விட அதிகம் தெரிந்து வைத்துள்ளார், என்றார்.

அதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது :- கரூர் மாவட்டத்தில் ஜவுளி துணி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டுதல் பிரதான தொழிலாக உள்ளது. ஜவுளித் துறைக்கு முக்கியமான சாயப்பட்டறை பூங்கா அமைப்பது கடந்த காலத்தில் செயல்படுத்த முடியாத நிலையில், தற்போது அது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிச்சயம் நம் முதல்வர் ஜவுளி பூங்காவிற்கு அனுமதி அளித்து, நிதியையும் ஒதுக்குவார். தொழில் வளர்ச்சி பெற வேண்டும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சாயப்பட்டறை பூங்கா அமைக்கப்படும். தேர்தல் அறிக்கையில் முதல்வர் கூறியது போல கரூர் மாவட்டத்தில் விமானம் நிலையம் அமைக்க வழி வகை செய்யப்படும். 100 % வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கரூர் மாறும், எனக் கூறினார்.

இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். பின்பு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைக் கோவிலூர் பகுதியில் மூடப்பட்டுள்ள நூற்பு ஆலை இடத்தில் சாயப்பட்டறை பூங்கா அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Views: - 141

0

0

Leave a Reply