கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடவும் : மு.க. ஸ்டாலின் கோரிக்கை..!

15 September 2020, 2:32 pm
Stalin 02 updatenews360
Quick Share

கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் இன்று தொடங்கியதும். நீட் தேர்வு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது :- கொரோனாவை கையாளுவதில் அரசு தோல்விடையந்து விட்டது. இறப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு இன்னமும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், மாநிலத்தின் பொருளாதாரம் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் செயல்பாடு பற்றியும் தெரியவில்லை.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினேன். ஆனால், அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட நிதி இழப்பு, செலவி செய்த தொகை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 7

0

0