பலூன் வெடித்ததால் பாஜகவினர் ஓட்டம்! மோடி பிறந்தநாள் விழாவில் விபத்து!!
19 September 2020, 1:18 pmசென்னை : பாடி அருகே பாஜக விழாவல் எதிர் பாராத விதமாக கேஸ் நிரப்பிய 2000 பலூன்கள் வெடித்ததில் 13 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
சென்னை பாடி திருவலிதாயம் சிவன் கோவில் அருகே பாஜக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2000 ஹீலியம் நைட்ரஜன் வாயு கேஸ் பலூன்களை பறக்கவிட திட்டமிட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சரவெடி பட்டாசு கொளுத்தப்பட்டது.
அப்போது கேஸ் பலூன்கள் மீது தீப்பொறி பட்டதும் வெடித்துச் சிதறியதில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர் உள்பட பாஜகவைச் சேர்ந்த பலபேர் மீது சட்டென தீ பரவி காயமடைந்தனர். 2000 பலூன்களின் ரப்பர் துகள்கள் தீ பிடித்து எரிந்தபடி சிதறியதில் தலை, கை முகம் என உடலில் பல பகுதிகளில் ரப்பர்
துகள்கள் ஒட்டிக்கொண்டன.
சிலருக்கு அதிக தீ காயங்களும் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கொரட்டுர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரதமர் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.