3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை:வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

Author: Udhayakumar Raman
23 September 2021, 9:17 pm
Quick Share

வேலூர்: வேலூரில் குடும்பத் தகராறில் மன உளைச்சலான பெண் மூன்று குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினேஷ். டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி தினேஷின் மனைவி ஜீவிதா. கணவன் தினேஷ் தினமும் மதுபோதையில் வந்து ஜீவிதாவையும் குழந்தைகளையும் தாக்குவதாகவும் இதனால் தினசரி குடும்பத்தில் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜீவிதா 7 வயது பெண் குழந்தை அட்சயாவையும், ஐந்து வயது ஆண் குழந்தை நந்தகுமாரையும், ஆறு மாத கைக் குழந்தை குழந்தையையும் பெற்றதாயே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவரும் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தகவலறிந்து வந்த தெற்குகாவல் துறையினர் வழக்குபதிவு செய்து, 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் எடி.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் நேரில் விசாரணை மேற்கொண்டார். கணவரின் மது போதையால் இந்த குடும்பத்தில் உள்ள 4 பேரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சலவன்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 430

0

0