மரண படுக்கையில் தாய் : கடைசி ஆசையை நிறைவேற்ற மணக்கோலத்தில் மருத்துவமனையில் மகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2021, 2:19 pm
GH Marriage - Updatenews360
Quick Share

விழுப்புரம் : அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தாய் மாமன் மகளை திருமணம் செய்து தாயின் கடைசி ஆசையை மகன் நிறைவேற்றிய சம்பவம் காண்போரை நெகிழச் செய்துள்ளது.

விழுப்புரம் திருக்காமு நகரை சேர்ந்தவர் தயாளன் (வயது 40). இவர் பனையபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் இவரது தாய் முத்தாலம்மாள் (வயது 67) இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொரானா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

தாயின் கடைசி ஆசை என தனது மகன் தயாளனை திருமணம் செய்து பார்க்க முடியவில்லை என கூறினார். இதை கேட்ட மகன் தயாளன் , உடனடியாக மருத்துவமனையில் தாயை பார்க்க வந்திருந்த தனது தாய் மாமன் கோனுாரை சேர்ந்த கிராம உதவியாளர் ஏழுமலை என்பவரது மகளானகாயத்திரி என்பவரை உறவினர்கள் மத்தியில் பேசி திடீர் முடிவு செய்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் மணமகள் , மணமகள் மாலை மாற்றி , அம்மன் முன்னிலையில் மணமகள் காயத்திரி கழுத்தில் தாலி கட்டி , குங்குமம் இட்டார்.

மணமக்களுக்கு உடனிருந்த நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தகவலறிந்த மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தினர். திருமணமானதும் தாயிடம் ஆசி வாங்க மருத்துவமனைக்கு மணமக்கள் சென்றனர்.

டாக்டர்கள் வார்டினுள் அனுமதிக்காததால் தாயிடம் தகவலை தெரிவிக்குமாறு டாக்டர் மற்றும் நர்ஸ்களிடம் கூறிவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர் . மருத்துவமனையில் நடைபெற்ற திடீர் திருமணத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 434

1

0