டேங்கர் லாரியின் சக்கரத்தில் விழுந்த வாகன ஓட்டி : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 7:16 pm
acc - Updatenews360
Quick Share

இருசக்கர வாகனத்தின் மீது கேஸ் டேங்கர்லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில் தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

கோவையில் இருந்து திருப்பூருக்கு நாகராஜ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர் பாலசுப்பிரமணியம் என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.
பல்லடம் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே வந்த போது கொச்சியில் இருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த டேஙகர் லாரியின் இடது புறம் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நிலையிலும் லாரியின் சக்கரத்தில் சிக்கிய நாகராஜ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த அவரது நண்பர் பாலசுப்பிரமணியம் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் டேங்கர் ஓட்டுனர் செந்தில் ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Views: - 708

0

0