இந்தியாவில் முதல்முறை.. சென்னை விமான நிலைத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கு… சில்லறை கடைகளையும் திறக்க முடிவு

Author: Babu Lakshmanan
1 February 2023, 9:34 pm
Quick Share

சென்னை : இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுது போக்கிற்காக 250 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள், 5 திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், கார்பார்க்கிங் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இதில் கந்த ஆண்டி டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்தக்கூடிய கார் பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

அதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தை முன்கூட்டியே விமானத்திற்கு வந்து காத்து இருக்கும் பயணிகள், விமானத்தில் சென்னை வந்து மாற்று விமானத்திற்க்கு அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகள் பொழுது போக்கிற்காக 5 திரைகள் கொண்ட PVR திரையரங்கம் இன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இதனை நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும், நடன நிகழ்ச்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட இணைப்புப் பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் 1000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம்.

மேலும், கூடிய விரைவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள உணவு விடுதிகள், சில்லறை கடைகள் உள்ளிட்டவற்றை திறக்கப்பட உள்ளன. இதனால், விமானநிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவிலேயே முன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுது போக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 393

1

0