முத்துராமலிங்க தேவரின் கவசம் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் முன்னிலையில் வங்கியில் ஒப்படைப்பு!!

5 November 2020, 4:43 pm
OPS Kavasam - Updatenews360
Quick Share

மதுரை : தேவர் குருபூஜை விழா நிறைவடைந்த நிலையில் தேவரின் தங்ககவசம் அண்ணாநகர் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் ஒப்படைக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் உள்ளது. நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 13 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கினார்.

4.5 கோடி மதிப்பிலான தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுக சார்பில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குரு பூஜை விழா 23ம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க கவசம் தேவர் குருபூஜை நிறைவடைந்த நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுர்ராஜு, வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள், வடக்கு சட்டமன் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Views: - 19

0

0