மைதானத்தில் மது அருந்தியவர்களை பட்டா கத்தியால் வெட்டிய மர்மநபர் : அதிர வைக்கும் சிசிடிவி காட்சி..!

13 July 2021, 9:42 pm
Quick Share

சென்னை: சென்னையில் மைதானத்தில் மது அருந்தியவர்களை பட்டா கத்தியுடன் வலம் வந்த மர்ம நபர் ஒருவர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை திரு.வி.க நகர் பல்லவன் சாலை அருகே உள்ள காலி மைதானத்தில் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மது அருந்தி கொண்டிருந்தியுள்ளனர். அப்பொழுது கையில் பட்டாகத்தியோடு ஓடி வந்த மர்ம நபர் ஒருவர் அந்த கும்பலில் இருந்த அனைவரையும் சராமாரியாக வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல் தங்களது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தெரித்து ஓடி உள்ளனர். இருந்தாலும் பின்னால் வந்த தனது கூட்டாளியின் இருசக்கர வாகனத்தில் துரத்தி செல்லும் நபர் மீண்டும் அதே இடத்திற்கு வந்து அங்கே தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த நபர்களையும் பட்டாகத்தியால் வெட்டியுள்ளார். தகவல் அறிந்த திரு.வி.க நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 127

0

0