கோவில் காவலாளியை தாக்கிய மர்ம கும்பல்…! சிசிடிவி காட்சி வெளியீடு…!! குற்றவாளிகளுக்கு போலீசார் வலை…

Author: kavin kumar
28 February 2022, 4:46 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் கோவில் காவலாளியை நள்ளிரவில் மர்ம நபர்கள் கத்தி மற்றும் கற்களால் தாக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (53). புதுச்சேரி நகர பகுதியான காந்தி வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 22 ஆம் தேதி இரவு இவர் உறங்கி கொண்டிருந்த போது மூன்று மர்ம நபர்கள் தன்னை கத்தி மற்றும் கற்களால் தாக்கி விட்டு சென்றதாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.

இதில் முதலில் ஒருவர் கையில் கத்தி உடன் வந்து சுப்ரமணியை தாக்குவதும்,அதில் பயந்து அவர் ஒட முயலும்போது மற்றொருவர் கற்களை எடுத்து தாக்குவதும், அப்போது மூன்றாவது நபர் இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து இருவரையும் ஏற்றி செல்வது பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து காவலாளி தாக்கபட்ட சிசிடிவி காட்சிகளை போலிசார் வெளியீட்டு மூன்று மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் தாக்கபட்ட கோவில் காவலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தாக்கியவர்கள் ஏதேனும் முன்பகை காரணமாகவா அல்லது குடிபோதையில் தாக்கினார்களா என்பது குறித்து அவர்களை பிடித்த பிறகே தெரியவரும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 521

0

0