MYV3 Ads விஜயராகவன் கைது.. PhD பட்டம் போலி.. திடீர் நெஞ்சுவலி : கோவையில் அதிரடி விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 2:33 pm
MYv3ads
Quick Share

MYV3 Ads விஜயராகவன் கைது.. PhD பட்டம் போலி.. திடீர் நெஞ்சுவலி : கோவையில் அதிரடி விசாரணை!

கோவையை தலையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் My V3 Ads என்ற நிறுவனம் மீது எழுந்த புகார்கள் குறித்து கோவை மாநகர போலிசார் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் ஹெர்பள் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் விளம்பரத்தை பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் எனவும் பலரை அந்நிறுவனம் சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணம் கட்டியதற்கு ஹெர்பல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்த ஹெர்பல் பொருட்களை சித்துவா ஹெர்பள் என்ற கம்பெனி வழங்குகிறது. இந்த சித்துவா ஹெர்பள் கம்பெனியின் உரிமையாளர் விஜயராகவன் V3 என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

இவர் போலி டாக்டர் பட்டம் பெற்று மோசடி செய்ததாக கூறப்பட்ட நிலையில் விஜயராகவன் நேச்சுரோபதியில் பிஎச்டி பட்டம் பெற்றதாக தெரிவித்து சான்றிதழ்களை தந்திருக்கின்றார்.

இதனை சரிபார்க்க அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதில் பல்கலைக்கழக சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், போலி டாக்டர் பட்டம் பெற்றுப்மோசடி வ்செய்த விஜயராகவனை மதுரையில் நேற்றிரவு கைது செய்தனர்.

அப்போது அவர் திடீரென உடல்நல குறைவு என கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த பிறகு போலிசார் அவரை இரவோடு இரவாக கோவைக்கு அழைத்து வந்தனர்.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Views: - 111

0

0