புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்ததற்கு நாராயணசாமியின் இயலாமையே காரணம் : முருகன் விமர்சனம்!!

23 February 2021, 1:29 pm
Murugan- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாராயணசாமியின் ஆட்சிக்கு கவிழ்வதற்கு காரணம் அவருடைய இயலாமை. அவருக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை அவர்களது எம்எல்ஏக்களால் தான் ஆட்சி கவிழ்ந்தது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டத்திற்க்கும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் கலந்துகெள்ள வருகை தந்த பாஜக மாநிலதலைவர் முருகன் செய்தியாளர்க்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில்:- பாண்டிச்சேரியில் நாராயணசாமியின் ஆட்சிக்கு கவிழ்வதற்கு காரணம் அவருடைய இயலாமை. அவருக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை அவர்களது எம்எல்ஏக்களால் தான் ஆட்சி கவிழ்ந்தது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


வரும் 25-ஆம் தேதி கோவையில் பிரதமர் மோடி தமிழகத்தின் முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்கிறார். ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெறும். பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை மத்திய அரசும் தமிழக அரசும் கவனத்தில் கொண்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு வரும்.

தமிழக அரசு ஏராளமான பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது அதனை மக்களிடம் கொண்டு செல்லவே விளம்பரம் செய்யப்படுகிறது அதில் என்ன தவறு உள்ளது.
எத்தனை இடங்களில் போட்டி என்பதை விட எத்தனை இடங்களில் வெற்றி என்பதே பாஜக வின் நோக்கம் என்று கூறினார். பேட்டியின் போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் உடனிருந்தனர்

Views: - 6

0

0