நீட் தேர்வு வரப்போகுது, பயிற்சிக்கு ரெடியா இருங்க… தேர்வு விலக்கு பெற சட்டப் போராட்டங்களும் தொடரும் : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2022, 4:21 pm
Minister Anbil - Updatenews360
Quick Share

திருச்சி : நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களும் தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர், பாப்பாகுறிச்சி இப்பகுதி காட்டூரில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியின் அருகிலேயே நெய்குணம், வீதிவடங்கம், களமலை எனும் பல சிறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் செல்வது என்றால் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று காட்டூர் கடை வீதிக்கு வந்து பஸ் ஏற வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து தொகுதி எம்எல்ஏ வும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து காட்டூர் வழியாக பாப்பா குறிச்சிக்கு புதிய பஸ் வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவராக கோட்டாட்சியர் தவச்செல்வம் , திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், போக்குவரத்து துறை திருச்சி மண்டல பொது மேலாளர் சக்திவேல், வணிகர் துணை மேலாளர் சதீஷ்குமார், கோட்ட மேலாளர் நகரம் சுரேஷ்குமார், துவாக்குடி கிளை மேலாளர் எட்வர்ட் கென்னடி, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், மாநகராட்சி துணைமேயர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பேருந்து சேவைகள் இல்லாத வழித்தடங்களுக்கும் விரைவில் சேவை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தனியார் பள்ளிகள் தங்களின் வாகனங்களைப் பராமரித்து இயக்க வேண்டும். இதனைப் பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப மாணவர்கள் பஸ்ஸின் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனைப் பேஷனாக எண்ணாமல் தவிர்க்க வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்த போது அளித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவில் தெரிவித்துள்ளார்.
தற்போது நீட்தேர்வு வரும் ஜீலை 17 ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சி தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், நீட்தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

Views: - 699

0

0