குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை: மூதாட்டி குழந்தையை வீசிச் செல்லும் அதிர்ச்சி காட்சிகள்..!!

14 July 2021, 3:07 pm
Quick Share

சேலம்: சேலத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனை அருகே மாவட்ட சுகாதார அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் மீனா என்ற பெண் குப்பை சேகரித்துள்ளார். அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று துணிப் பையில் வைத்து குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து சேலம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் மூதாட்டி ஒருவர் கட்டைப் பையில் குழந்தையை எடுத்து வந்து குப்பைத்தொட்டியில் போட்டு விட்டுச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இக்காட்சியை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 207

0

0