கலைநிகழ்ச்சியில் மாணவியின் முகத்தில் தீப்பற்றியால் பரபரப்பு… மேடையில் சாகச நடனத்தின் போது அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 7:58 pm
Quick Share

குன்னூரில் உள்ள நவராத்திரி மகா உற்சவ கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவியின் முகத்தில் திடீரன தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் சித்தகிரி சாய் தர்மக்ஷேத்ரா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, ஆன்மிகம், சுற்றுச்சூழல், கலாசார சேவை வழங்குகிறது, தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

நீலகிரி மக்களுக்கு இலவச, உயர்தர சுகாதார சேவையை தொடர்ந்து பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில், பன்முகத்தன்மை கொண்ட மருத்துவமனை இங்கு செயல்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற சாய் தர்மக்ஷேத்ராவில், நவராத்திரி மகா உற்சவ் விழா துவங்கியது.

துவக்க விழாவான இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்‌‌. இந்த நிகழ்ச்சியில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் பாடல் நிகழ்வுகள் நடைபெற்றது.

மேலும், கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரத நாட்டியம், கதகளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவி ஒருவர் வாயில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீயில் அதை ஊத முயன்றார். அப்போது, திடீரென மாணவியின் முகம் மற்றும் வாய் பகுதியில் தீ பற்றியது.

இதனால் நிலை குலைந்து மாணவி துடித்தார். உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அனைக்க முயன்றனர். தீயை அனைத்து காயங்களுடன் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கி நடைபெற்றது.
.

Views: - 1590

0

0