ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிறுவனம் ஊதிய உயர்வு..! 14 ஆயிரம் பேர் ஹேப்பி…!

11 August 2020, 9:33 pm
Quick Share

நெய்வேலி: ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிறுவனம் ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.

நெய்வேலியில் என்எல்சி  நிறுவனத்தில் கிட்டத்தட்டட 14 ஆயிரம்  ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊதிய உயர்வு கேட்டு அவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் இறங்கி வருகின்றனர்.

ஆகையால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு புதிய ஊதியம், படிகள் வழங்குவது குறித்து ஆராய குழு ஓன்று அமைக்கப்பட்டது. அக்குழு ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, உணவு, வீட்டு வாடகை சலுகை படியும் தரப்படும்.

ஊதிய உயர்வு பலன் நடப்பாண்டு ஜனவரியிலிருந்து வழங்கப்படும். புதிய ஊதிய உயர்வு உடன்பாடு வரும் டிசம்பர் முதல் 2026 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உயர்வால் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Views: - 26

0

0