யார் என்ன சொன்னாலும் 3வது முறையாக ஆட்சியில் அமரப் போகிறார் பிரதமர் மோடி : அண்ணாமலை சூளுரை!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 6:52 pm
Tiru
Quick Share

யார் என்ன சொன்னாலும் 3வது முறையாக ஆட்சியில் அமரப் போகிறார் பிரதமர் மோடி : அண்ணாமலை சூளுரை!

என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமரவுள்ளார். அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 39 எம்பிக்கள் அமர்த்தி அழகு பார்க்கப்படும். இந்த யாத்திரைக்காக கடுமையாக உழைத்துள்ளோம். நம் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.

நாம் செய்யவேண்டியது இன்னும் பாக்கி உள்ளது. நம் பணி என்பது இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எல்லோருடைய உழைப்பையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வு இல்லை. இதனை மக்களாகிய நீங்கள் செய்து காட்டவேண்டும்.

10 ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கும்போது தமிழகத்தின் மாற்றம் பல்லடத்தில் இருந்து நடந்தது என்ற சரித்திரத்தில் நாம் இருப்போம். பட்டிதொட்டி எங்கும் பிரதமர் மோடியின் புகழ் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் மோடி மோடி என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே, 2014 மற்றும் 2019ல் செய்த தவறை தமிழக மக்கள் மீண்டும் செய்யப் போவதில்லை. பொய் பரப்புரைகளுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் கூட இந்த தேர்தலில் 3வது முறையாக ஆட்சியில் மோடி அமர போகிறார் என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், 400 எம்பிகளை தாண்டி 450 வரை எடுத்து செல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை கொடுக்க வேண்டும்.

நிச்சயமாக தமிழக மக்கள் அதனை செய்வார்கள். இந்த மாநாடு முடிந்து தமிழகம் முழுவதும் செல்லும்போது அர்ப்பணிப்புடன் பிரதமர் மோடிக்காக பாடுபட வேண்டும். கண்டிப்பாக பாஜக கட்சி தமிழக மக்களுடன் இருக்கும். தமிழக மக்கள் கனவு காணும் தமிழகத்தை உருவாக்கி காட்டுவோம் என்று சத்தியமிடுகிறேன் என கூறினார்.

Views: - 85

0

0