இனி விமான நிலையங்களில் முதலில் தமிழில் அறிவிப்பு இடம்பெறும் : அமைச்சர் பாண்டியராஜன் உறுதி!!

6 November 2020, 8:11 pm
Mafa Pandiarajan - Updatenews360
Quick Share

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானத்திலும் தமிழில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் செயலாளரை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களிலும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.

சென்னையில் தரையிறங்கும் அனைத்து விமானக்ளில் முதல் அறிவிப்பு தமிழ் மொழியில் வரும் பொங்கலுக்குள் இடம்பெறும் என கூறிய அமைச்சர், அலுவல் மொழி சட்டத்திலும் தமிழ் இடம்பெற கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.

Image

இந்த நிலையில் தமிழக அமைச்சர் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டிவிட்டரில் பதிவிட்டு, அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்புகள் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விமான நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Views: - 22

0

0