இனி தினமும் போகலாம் : சேலம் – சென்னை விமான சேவை!!

16 November 2020, 4:09 pm
Tru JEt - Updatenews360
Quick Share

சேலம் முதல் சென்னை இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

சேலம் – சென்னை இடையிலான ட்ரூஜெட் விமான சேவை உதான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி சேவையா இயக்கப்பட்டு வந்த இந்த சேவை நிர்வாக காரணங்களுக்குக நிறுத்தப்பட்டது.

கடந்த மாதம் 25ம் தேதி முதல் செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டும் சேவை நிறுத்தப்பட்டு மற்ற 5 நாட்களும் தினசரியாக இயக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் மீண்டும் விமான சேவை தினசரியாக சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் காலை 7.15 மணிக்கு விமானம் புறப்பட்டு 8.15 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் சேலத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு 9.35 மணிக்கு சென்னை வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் நிறுத்தப்பட் சேவை தினசரியாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதால் சேலம் – சென்னை விமான பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 18

0

0