ஆஃபாயிலால் வெடித்த கலவரம்… தள்ளுவண்டி பெண்ணுடன் தகராறு ; 2 இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
28 November 2023, 11:44 am
Quick Share

திருப்பூர் – காங்கேயம் அருகே உடைந்து போன ஆஃபாயிலுக்கு பணம் தராத விவகாரத்தில் தள்ளுவண்டி கடை நடத்தும் பெண் மீது தாக்குதல் நடத்திய 2 இந்து முன்னணி பிரமுகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காங்கேயம் திருப்பூர் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த தம்பதி சவுந்திரராஜன் – கீதா (32). இவர்கள் திருப்பூர் ரோடு, சிவசக்தி விநாயகர் கோவில் அருகே தள்ளுவண்டி ஹோட்டல் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும், காங்கேயம் இந்து முன்ணணி நகர செயலாளர் நாகராஜுக்கும்,10 நாட்கள் முன்பாக சாப்பிடும் முன்பே ஆஃபாயில் உடைந்து போனதால் காசு கொடுக்காததால் பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்து முன்ணணி மாவட்ட பொது செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் நாகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இந்து முன்ணணி அமைப்பினர் கடைக்கு வந்தனர். சவுந்திரராஜன் மனைவி கீதாவிடம் கோவிலுக்கு அருகே ஆம்லெட் விற்கக் கூடாது என எச்சரித்தனர். அதற்கு அவர்கள் நாங்களும் செல்லும் கோவில் தான் எனவும், எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது எனவும் கூறியுள்ளனர்.

மேலும் காங்கேயம் காவல்துறையில் புகார் தெரிவித்த இந்து முன்னணியினர் ஒரு காவலரை அழைத்து வந்தும் நீங்கள் இங்கே கடை போடக்கூடாது எனவும் கூறியுள்ளனர். பதிலுக்கு சவுந்திரராஜனும் அவருடைய சகோதரர் கோபாலுக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். கோபாலும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். பின்னர், இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்ணணி கும்பல், அவரை தாக்கி உள்ளனர்.

பின்னர் காயமடைந்த கீதா மற்றும் உறவினர்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து கீதா நேற்று அளித்த புகாரின் பேரில் சதீஸ்குமார், நாகராஜ் உள்ளிட்டோர் மீது பெண் வன்கொடுமை வழக்கில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 261

0

0