அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: நீதி கேட்டு தர்ணா!!

1 November 2020, 3:45 pm
Lady Harassed - Updatenews360
Quick Share

வேலூர் : கடையில் வேலை செய்த பெண்ணை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி அவ்வப்போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் காவல்நிலைய வாசலில் அப்பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வேலூர்மாவட்டம்,காட்பாடி சேனூர் பகுதியில் வசிப்பவர் புனிதா. இவர் திருமணமானவர், இவருடைய கணவர் கட்டிட மேஸ்திரி புனிதா குடும்ப கஷ்டம் காரணமாக காட்பாடியில் உள்ள சட்டகல்லூரியின் எதிரில் உள்ள ஒரு கேரிங்க் ஏஞ்சல் ஷாப்பிங்க் என்ற ஒரு கடையில் மார்கெட்டிங் நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார்.

கடந்த 2018 ஏப்ரல் 20 ஆம் தேதி புனிதாவின் பிறந்தநாளை ஆபிசில் கொண்டாடியுள்ளனர் அன்று மாலை 6 மணிக்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரால்ஸ்டன் கருணாகரன் என்பவர் இப்பெண்ணை விருந்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த திண்பண்டங்களை அவருக்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட அவர் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணின் முழு ஆடைகளையும் நீக்கிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்துகொண்டு அதனை அடிக்கடி இண்டெர்நெட்டில் போட்டுவிடுவதாக காட்டி மிரட்டி அப்பெண்ணை பலமுறை பாலியல் பலாதகாரம் செய்துள்ளார்.

பாலியல் பலாத்காரத்திற்கு மறுத்தாலும் பலவந்தமாக அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார். இதனால் அந்நிறுவனத்தின் பணியிலிருந்து இப்பெண் நின்றுவிட்டார் இருப்பினும் நேரடியாக அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று மிரட்டி மதுபோதையில் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி காந்தி நகர் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்த போது மீண்டும் மிரட்டி வம்பிழுத்திருக்கிறார். இதனால் பயந்த இந்த பெண் விருதம்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் காவல்துறை இதுவரையில் நடவடிக்கை எடுக்காததால் மயக்க மருந்து கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டி வரும் நபரை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண் புனிதா விருதம்பட்டு காவல்நிலைய வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட புனிதாவிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றார். இதனால் காவல்நிலையம் அருகில் பரபரப்பு காணப்பட்டது

Views: - 19

0

0