அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்திருக்கேன்… ‘தலைமை செயலர் இறையன்பு என் சித்தி பையன்’.. காவி உடை மூதாட்டி ‘கலகல’!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 5:10 pm
Quick Share

அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்திருக்கேன் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்தபடி வாக்கு கூறிய மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான மக்கள் பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்கள் கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். இந்த நிலையில், துறவி வேடம் அடைந்த ஒரு பெண் நெத்தியில் பட்டையும், கழுத்தில் கருப்பு நிற மணியும் அணிந்தபடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் போர்டிகோவில் வந்த அமர்ந்தார்.

அப்போது, “நான் சமயபுரத்து அம்மா எனக் கூறி என்னை பற்றி தெரிய வேண்டுமென்றால், ‘ஜெயந்தி அம்மா அருள் வாக்கு டாட் காம்’ என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்”, என கூறினார். எதற்காக இங்கு அமர்ந்துள்ளீர்கள் என கேட்டதற்கு, சும்மா பொழுது போகவில்லை வீட்டில் போரடிக்கிறது. அதனால்தான் வந்தேன் எனவும். ஈபி பில் தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் லஞ்சப் பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள் என சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தான் மனு கொடுக்க வந்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்காகத்தான் கலெக்டரை பார்க்க வந்தேன். ஆனால் அவர் திங்கள்கிழமை ஆனால் வருவதில்லை எப்பையாவதுதான் அவர் வருவார் என்றார். தொடர்ந்து அங்கு இருந்த போலீசார், சரி எந்திரிங்க என்று கூறிய போது, அதற்கு ‘இருப்பா வயசாயிடுச்சு இல்ல எந்திரிக்க’ என்ன கூறி செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்து, எவ்வளவு அழகாக படம் பிடிக்கிறார் என பாருங்கள், ஓம் சக்தி அண்ணாமலைக்கு அரோகரா என கூறி, நான் அழகாக இருக்கிறேனா எனவும் சிரித்தபடியே கூறினார்.

உங்கள் ஊர் என்ன என்று கேட்டதற்கு அறநிலையத்துறை ஆணையாளர் பிச்சாண்டி மனைவியின் தங்கை என கூறிய அவர், தலைமைச் செயலாளர் இறையன்பு எனது அம்மாவின் தங்கச்சி பையன் என கூறியதோடு, அவர் யார் பெயரும் போடாதீர்கள் இறைவன் பெயர் மட்டும் போதும், என தெரிவித்தார்.

சரி எந்திரிக்கவா என காவலரை பார்த்து கேட்ட அவர், இந்த பேக் நீங்க எடுங்க என சொல்லி, பேக்கை எடுத்துட்டு போய்டாதப்பா எனவும் நக்கல் அடித்தார். போதும் தம்பி என்னை எவ்வளவு நேரம் படபிடிப்ப, நானே கவலையா இருக்கேன் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது மீண்டும் அருள்வாக்கு ஜெயந்தி அம்மா டாட் காம் சென்று பாருங்கள் என்று கூறி, ஓம் நமச்சிவாயா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Views: - 279

0

0