தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் : செம்பரம்பாக்கம் ஏரியால் அச்சம்!!

13 November 2020, 10:24 am
Sembarambakkam - Updatenews360
Quick Share

தமிழகத்தில் தீபாவளியான நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகள் முறையாக கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாமல் ஆகாயத் தாமரை செடிகள் நிறைந்து கிடப்பதாக மீண்டும் பெருவெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, தற்போது இரண்டரை டிஎம்சி உள்ளது. ஆனால் ஏரி முறையாக தூர்வாரப்படாதால் ஆகாயத் தாமரை செடிகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் ஏரியில் நீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியை ஒரு மீட்டர் அளவில் ஆழப்படும் பணிகள் கடந்த ஆண்டே தொடங்கினாலும் பணிகள் மெத்தனமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் ஏரிகள் நீர்நிலைகள் முறையாக கண்காணிக்க மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Views: - 21

0

0