பத்மநாபபுரம் அரண்மனை நாளை திறப்பு: சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி

Author: Udhayakumar Raman
13 September 2021, 9:48 pm
Quick Share

146 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாத் தலமான பத்மநாபபுரம் அரண்மனை நாளை திறக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் பத்மநாபபுரம் அரண்மனையும் ஒன்று. இந்த அரண்மனை, கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி முதல் மூடப்பட்டது. தற்போது தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கேரள அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பத்மநாபபுரம் அரண்மனை மட்டும் திறக்கப்படாத நிலையில் இருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலாத் தலமான பத்மநாபபுரம் அரண்மனையை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அரண்மனையை திறக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் கேரளா அரசு நாளை முதல் அரண்மனையை திறக்க உத்தரவிட்டுள்ளது.146 நாட்களுக்குப் பிறகு நாளை அரண்மனை திறக்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 376

0

0