பக்தர்களின் கவனத்திற்கு..!! அக்.,1ம் தேதி முதல்… பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட புதிய உத்தரவு

Author: Babu Lakshmanan
19 September 2023, 9:43 pm
Quick Share

பழனி கோவிலில் வருகின்ற 1ஆம் தேதி முதல் செல்போன், புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள் எடுத்துச் செல்ல தடை விதித்து கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சில நாட்களாக கோவில் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இதனை இதனை தடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதனை எடுத்து, கோவில் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததை அடுத்து, கோவில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியதாவது :- வருகின்ற அக்டோபர் 1 ம் தேதி அன்று முதல் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. எனவே பக்தர்கள் 1 10 2023-ம் தேதி முதல் கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ, சாதனங்களை திருக்கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தவறி கொண்டு வரும் பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ சாதனங்களை திருக்கோவில் நுழைவாயிலில் உள்ள படிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்லுமாறும், தரிசனம் முடிந்து பின்னர் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • sivakarthikeyan-updatenews360அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!
  • Views: - 315

    0

    0