TTF வாசனுக்கு மேலும் ஒரு சிக்கல்… அடுத்தடுத்து பாயப் போகும் வழக்குகள்…? துருவி துருவி போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
19 September 2023, 7:16 pm
Quick Share

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். இளைஞர்கள் மத்தியில் இவரது யூடியூப் சேனல் ரொம்பவே பிரபலம். கோவையைச் சேர்ந்த இவர் தொடர்ச்சியாக அவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதிவேகமாக வாகனம் ஓட்டி, அதை சமூக வலைத்தளங்களிலும் இவர் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார்.

இந்தச் சூழலில் தான் அண்மையில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது விபத்தில் சிக்கினார். அதிவேகமாகச் செல்லும் போது அவர் வீலிங் செய்ய முயன்ற நிலையில், அவரது பைக் நிலைதடுமாறி இரண்டு முறை தலைக்குப்புற சுற்றி பள்ளத்தில் விழுந்தது.. இதனால் அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சாலையில் சட்டவிரோதமாக சாகசத்தில் ஈடுபட முயன்றதாக டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டு ஹெல்மெட்டை அனுமதியின்றி பயன்படுத்தியதாக டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது நண்பர் அஜீஸ் இந்த ஹெல்மெட்டை சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்ததாகவும், உரிய அனுமதி பெறாமல் டிடிஎஃப் வாசன் அதனை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத இந்த ஹெல்மெட்டின் விலை ரூ.1.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அனுமதி சான்று பெறாத காரணத்தினால் அந்த ஹெல்மெட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. எனவே, அஜீஸ் வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த ஹெல்மெட்டை எவ்வாறு கொண்டு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 222

0

0