இன்று மாலை திருக்கல்யாணம்… நாளை பங்குனி தேரோட்டம்… பழனியில் குவியும் பக்தர்களின் கூட்டம் ; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 1:01 pm
Quick Share

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா மாலை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதையொட்டி,  சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பழனி முருகன் கோவிலில் விமர்சியாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.  

பங்குனி உத்திர திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று மாலை 6:00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. நாளை மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் நடைபெற உள்ளது. 

பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்திற்க்கு  வருகை தந்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். 

மலையடிவாரத்தில் பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Views: - 103

0

0