5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க ஊராட்சி மன்ற செயலாளர் முயற்சி… விவசாயி குடும்பத்தினர் மீது தாக்குதல்.. தருமபுரியில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 7:23 pm
Land - Updatenews360
Quick Share

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே திப்பிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி மலர்விழி மற்றும் மகன் மோகிநாத் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான சந்தனூர் மேடு பகுதியில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் நிலத்தின் அருகே மகாலிங்கம் என்பவருக்கு சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார். இதனால் குமாரிடம் உங்களிடம் உள்ள விவசாய நிலத்தை தந்து விடும்படி பல முறை கேட்டுள்ளார்.

இதற்கு தரமறுத்த குமாரை பல நாட்களாக அடியாட்களை வைத்து தாக்கி உள்ளார். இதகுறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.

இந்நிலையில் கடந்த 15 ந் தேதி குமார் தனது நிலத்தை உழுவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மகாலிங்கம் தனது அடியாட்களை அனுப்பி குமார் அவரது மனைவி மற்றும் மகன் 3 பேரையும் கடுமையாக தாக்கி உள்ளார்.
இதில் குமாரின் பல் பிடுங்கபட்டும், மகனின் கை உடைக்கபட்டும் மனைவி மலர்விழியினை கடுமையாக தாக்கபட்டும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.

இதகுறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால் ஊராட்சி மன்ற செயலாளரை அழைத்து சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

தங்களுக்கு நிரந்த தீர்வு காணப்பட வில்லை எனவும், தங்களை தாக்கிய மகாலிங்கம் மற்றும் அவரது அடியாட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர். குமாரின் குடும்பத்தினரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Views: - 298

0

0