“உள்ளதும் போச்சே“ : இலவச அறிவிப்பை வெளியிட்டு கூட்டத்தை கூட்டிய ஜவுளிக் கடைக்கு அபராதம்!!

9 November 2020, 7:12 pm
Textile Shop Fine - Updatenews360
Quick Share

அரியலூர் : அரியலூர் நகரில் கூட்டத்தை சேர்க்கும் வகையில் இலவச அறிவிப்பு வெளியிட்ட ஜவுளி கடைக்கு அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் இலவச பொருட்களை நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது.

கொரோனா தொற்றை கட்டுபடுத்த அரியலூர் மாவட்ட, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையொட்டி தீபாவளி பண்டிகைக்காக கூட்டத்தை சேர்க்கும் வகையில் இவலச அறிவிப்பு எதனையும் வெளியிட கூடாது என அரியலூர் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் நகர பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மார்கெட் தெருவில் உள்ள தனியார் ஜவுளி கடையில் அதிக உடைகள் எடுப்பவர்களுக்கு வாளி இலவசம் என அறிவிப்பு வெளியிட்டு வியாபாரம் செய்ததை கண்டு அக்கடைக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து பக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுபோல் தொடர்ந்தால் கடைக்கு சீல் வைக்கபடும் எனவும் எச்சரித்தனர். பின்னர் அனைத்து கடைகளையும் சோதனை செய்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், வாடிக்கையாளர்களை முககவசம் அணிய வலியுறுத்த வேண்டும் எனவும் கடை உரிமையாளர்களை நகராட்சி சார்பில் கேட்டு கொள்ளபட்டுள்ளது.

Views: - 24

0

0