MyV3 ads நிறுவனத்திற்கு சிக்கல்… மோசடி செய்த பணம் ; கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலும் 10 பேர் பரபரப்பு புகார்…!!

Author: Babu Lakshmanan
8 February 2024, 8:36 am
Quick Share

MyV3 ads நிறுவனம் மக்களை நம்ப வைப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாக பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி குற்றம்சாட்டினார்.

MyV3 ads நிறுவனம் இதற்கு முன்பு V3Online என்ற நிறுவனம் மூலம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், மேலும் 10 பேர் V3 Online நிறுவனம் மோசடி செய்ததாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் பாமக கட்சியை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி முன்னிலையில் அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய அசோக் ஸ்ரீநிதி, MyV3 நிறுவனம் இதனை துவங்கும் முன்னர், V3Online TV என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளதாகவும், சக்தி ஆனந்த், மற்றும் விஜய ராகவன் ஆகியோர் அந்நிறுவனத்தை நடத்தி உறுதியாக மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அவர்கள் பெற்றுள்ள கௌரவ டாக்டரேட் பட்டம் போலியானது எனவும், யுனிசெப் இன்டர்நேஷனல் என்ற ஒரு நிறுவனத்தை இவர்களாகவே துவக்கி அவர்களுக்குள்ளேயே இந்த பட்டத்தை வழங்கிக் கொண்டனர் எனவும் தெரிவித்தார். யுனிசெப் நிறுவனத்தில் பணிபுரியும் பிரபு என்ற ஒரு நபர், மதுரையை சேர்ந்த ஒருவரிடம் ஆளுநரிடமே விருது வாங்கித் தருவதாகக் கூறி 15 லட்சம் ஏமாற்றியதாக தெரிவித்தார்.

கடந்த வருடம் இது குறித்து ஆறு பிரிவுகளின் கீழ் சென்னையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த MyV3 Ads நிறுவனத்திற்கு V ஹெர்பல் கேர் என்ற நிறுவனம் தான் மருந்துகளை தருவதாக குறிப்பிட்ட அவர், இதன் நிறுவனரும் பாரத் சேவக் சமாஜ் என்ற மத்திய அரசின் அமைப்பின் சேன்ஸ்லரும் ஒரே நபர் தான் என தெரிவித்தார். மேலும், அவர் பத்தாம் வகுப்பில் 4 பாடங்களில் தேர்ச்சி பெறாதவர் எனவும் கூறினார்.

V3 Online TV மூல மோசடி செய்த பணத்தில் தான் MyV3 நிறுவனத்தை துவங்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த MyV3 Ads நிறுவனத்தில் இருப்பவர்களை நம்ப வைப்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 212

0

0