வளர்த்த மகளை திருமணம் செய்த பெரியார்.. கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு : 2 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 4:24 pm
Periyar Psoter -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் பெரியார் குறித்து அவதூறு கருத்துடன் கூடியன்போஸ்டரை ஓட்டியதாக இந்து அமைப்பினர் 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

அதை தொடர்ந்து இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகர போலீஸ் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் பணி புரியக்கூடிய அதிகாரிகள் சமூகநீதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நேற்று நள்ளிரவு 100 அடி சாலை மற்றும் டாடாபாத் பகுதியில் தந்தை பெரியாரைப் பற்றி அவதூறாகவும், வளர்த்த மகளை திருமணம் செய்து கொண்டவர் என குறிப்பிட்டு பாரத் சேனா அமைப்பின் சார்பாக ஒருவர் வால் போஸ்டரை ஒட்டிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த கோவை காந்திபுரம் காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன், இன்ஸ்பெக்டர் சாந்தி (பொறுப்பு) ஆகியோர் வால் போஸ்டர் ஒட்டிய ரவிகுமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோவை மாவட்ட பாரத் சேனா இளைஞர் அணி பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் (வயது 31) என்பவரும் பாரத் சேனா பீளமேடு பகுதி உறுப்பினர் தமிழரசன் (வயது 30) ஆகியோர் போஸ்டரை தன்னிடம் கொடுத்து ஓட்டச் சொன்னதாக அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழரசனை பிடித்து வைத்து காந்திபுரம் காட்டூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் பிறந்த நாள் தினத்தில் ஒட்டப்பட்ட் இந்த அவதூறு போஸ்டர்கள் கோவை மாநகரில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

Views: - 341

0

1