மலைபோல் உயரும் பெட்ரோல், டீசல் விலை … வாகன ஓட்டிகள் கலக்கம்..!!!

Author: Babu Lakshmanan
30 October 2021, 8:32 am
Petrol Rate - Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ரூ.106ஐ நெருங்குகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.105.43 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.25 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.105.74க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.101.92க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Views: - 345

0

0