19 வயது இளைஞரை “தள்ளிட்டு“ சென்ற தள்ளுவண்டி பெண் வியாபாரி : கொலையில் முடிந்த உல்லாசக் கதை!!

1 March 2021, 7:31 pm
Illegal Love murder -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கீரனூரை சேர்ந்த தண்டபாணி தனது மனைவி தேவி மற்றும் ஒரு மகன் மகளுடன் வசித்து வருகிறார். இருவரும் தாராபுரத்தில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

தாராபுரத்தில் பழ வியாபாரம் செய்து வரும் தம்பதியின் இரவி நேரத்தில் கீரனூர் வருவது வழக்கம். சில சமயம் கீரனூருக்கு கணவர் தண்டபாணி மட்டுமே செல்வார். தேவி தனது தாய் வீடு தாராபுரத்தில் இருப்பதால் தங்கி விடுவார்.

இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி தேவி மட்டும் கீரனூருக்கு வந்ததுள்ளார். அருகில் உள்ளவர்கள் தண்டபாணி குறித்து கேட்டதும், அவர் வெளியூர் சென்றிருப்பதாக கூறியுள்ளார். மறுநாளே கீரனூர் காவல்நிலையத்திற்கு சென்று தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலீசார் தேவி மீது சந்தேகம் அடைந்தனர். இருப்பினும் தண்டபாணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எந்த அறிகுறியுமே தென்படாததால், தேவியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

அப்போது அவர் சொன்ன தகவலை கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். தாராபுரத்தில் பழ வியாபாரத்தை முடித்த பிறகு, வழக்கம் போல கீரனூருக்கு கணவர் புறப்பட, தாராபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு தேவி சென்றுள்ளார்.

அப்போதுதான் தாய் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அபிஷேக் என்ற 19 வயது இளைஞருடன் தேவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி வியாபாரத்தை தண்டபாணியிடம் ஒப்படைத்து விட்டு தாய் வீட்டிற்கு நேரமாக கிளம்பி விடுவாராம் தேவி.

இதை நோட்டமிட்ட தண்டபாணி, இளைஞருடன் உள்ள பழக்கத்தை விடுமாறு தேவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் இதற்கெல்லாம் கொஞ்சம் கூட பயப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி சம்பத்தன்று, அபிஷேக்கை கீரனூர் வீட்டிற்கு தேவி அழைத்துள்ளார்.

இருவரும் உல்லாசமாக இருப்பதை கண்கூடாக பார்த்த தண்டபாணி இருவரையும் தாக்க முற்பட்டுள்ளார். இதையடுத்து தேவி பிளாஸ்டிக் கவரை எடுத்து தண்டபாணி முகத்தை மூடி கயிறு போட்டு கட்டி, ஒரு கம்பி எடுத்து சரமாரியாக தாக்கி பின்னர் சடலத்தை மூட்டை கட்டி பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

இதைக்கேட்டு போலீசார் அதிர்ந்து போகினர். இதையடுத்து தேவியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், 19 வயது இளைஞரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 1

0

0