ஓயாத ஜெய்பீம் சர்ச்சை…’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கும் வலுக்கும் எதிர்ப்பு: நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..!!

Author: Rajesh
9 March 2022, 3:34 pm

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் நாளை வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட்ட எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்படம் வெற்றிகரமான ஓடி வருமான ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி படமாகவே கருதப்பட்டது.

இந்நிலையில், ஜெய்பீம் படத்தில் அக்னிகலசத்துடன் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு ஓய்ந்தபாடில்லை. இதனிடையே, ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக தெரிவித்து, மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த வேல் திரைப்படம் பாமகவினரால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும், அக்னி குண்ட காட்சிகளை நீக்க வேண்டும் என சூர்யா, ஜோதிகா, 2டி நிறுவனம், இயக்குனர் ஞானவேல், அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகர் ஆற்காடு தெருவில் வசித்து வரும் நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 1274

    0

    0