பாஜக சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை…!!

26 October 2020, 9:06 pm
Quick Share

சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

கடலூர்: பெண்களை பற்றி திருமாவளவன் இழிவாக பேசியதாக, அதை கண்டித்து சிதம்பரத்தில் நாளை பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மகளிரணி சார்பில் குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். திருமாவளவன் எம்.பி.யாக உள்ள சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவே ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 25

0

0