குற்றச்சம்பவங்களை தடுக்க 3 சக்கர வாகனத்தில் ரோந்து வரும் போலீசார் : கோவையில் பேட்டரி ஆட்டோ அறிமுகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2023, 2:36 pm
Auot Patrol -Updatenews360
Quick Share

கோவை மாநகர போலீசில் போலீசார் ரோந்து செல்வதற்காக பைக், ஸ்கூட்டர்கள், ஜீப்கள் உள்ளன. குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இந்த வாகனங்களில் மாநகரில் இரவு முழுவதும் போலீசாா் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது போலீசாருக்கு சிறிய தெருக்களில் கூட ஆட்டோவில் சென்று ரோந்து செல்ல வசதியாக புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய 2 பேட்டரி ஆட்டோக்கள் வாங்கப்பட்டு உள்ளன.

அதில் ஒன்று முழுவதும் மூடிய நிலையிலும், மற்றொன்று டிரைவர் அமரும் இடம் மட்டும் மூடிய நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நவீன பேட்டரி ஆட்டோவில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் முடியும்.

அதில் ஒலிப்பெருக்கி, சைரன்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த ஆட்டோக்களில் உங்கள் பாதுகாப்பே எங்கள் குறிக்கோள், அவசர போலீஸ் எண், பெண்கள் புகார் தெரிவிக்கும் எண், மாணவர்கள், குழந்தைகள் புகார் எண்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்த அதிகாரிகள் கூறுகையில், ” போலீசாரின் ரோந்து பணிக்காக வாங்கப்பட்ட இந்த பேட்டரி ஆட்டோக்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீட்டர் வரை இயக்க முடியும். சிறிய தெருக்களில் கூட இரவு நேரத்தில் ரோந்து சென்று குற்றங்களை தடுக்க உதவியாக இருக்கும்”. என்றனர்.

Views: - 216

0

0