ஆன்மீக பயணம் முடித்து விரைவில் அரசியல் பயணம் : தனித்தா? கூட்டணியா? சசிகலா பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2022, 11:05 am
Sasikala - Updatenews360
Quick Share

திருக்கடையூர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சசிகலா திருச்சி வந்தடைந்தார்.

அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சசிகலாவிடம், அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்ற கேள்விக்கு, இங்கு தான் இருக்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.

மேலும், உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா?’ என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்லவில்லை. “கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து அப்புறம் பதிலளிக்கிறேன்” என தெரிவித்தார்

Views: - 699

0

0