புதுச்சேரியை புரட்டிப் போட்ட நிவர் புயல் : பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் நாராயணசாமி..!!

26 November 2020, 12:13 pm
narayanasamy inspection - updatenews360
Quick Share

புதுச்சேரியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை கடந்தது. ஆரம்பத்தில் அதி தீவிர புயலாக கரையைக் கடந்த புயல், பிறகு படிப்படியாக தீவிர புயலாகவே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. மேலும், மரங்கள் சரிந்து விழுந்து பல்வேறு இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

எனவே, மீட்பு பணிகளின், வெள்ள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 23 செ.மீ. அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதுமாதிரியான கனமழையை புதுச்சேரி மக்கள் இதுவரை கண்டதில்லை. அடுத்த 12 மணிநேரத்தில் நகரில் மின் இணைப்பு மீண்டும் திரும்பும்,” என கூறியுள்ளார்.

Views: - 0

0

0