சோழர்களே..! பாண்டிய நாட்டுக்கு வந்தோமா திண்டோமான்னு போய்கிட்டே இருக்கணும்.. PS 1-ஐ கிண்டல் செய்து ஒட்டபட்ட போஸ்டர்..!
Author: Vignesh30 செப்டம்பர் 2022, 12:27 மணி
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள சோழர்களின் வரலாற்று படமான ‘பொன்னியின் செல்வன்’ படமானது வெற்றிகரமாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அதிகாலையிலேயே வெளியானது.
பொன்னியின் செல்வன் FDFSஐ ரசிகர்கள் தியேட்டரில் மேளம் அடித்தும் பட்டாசு வெடித்தும் கோவில் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் பிரமாண்டமாக இசையமைத்துள்ளார்.
அந்த வகையில் இப்படமானது வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படம் குறித்து திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றனர். எனினும் இப்படமானது ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தைத் தான் பெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை மக்கள் எந்தப் படம் வெளியாகினாலும் சரி எப்போதுமே அப்படத்திற்கு போஸ்டர் ஒட்டித் தான் தங்கள் அன்பு, கோபம் இரண்டையும் வெளிக்காட்டுவார்கள். அதே போல் பொன்னியின் செல்வன் படத்திற்கும் குறும்பான ஒரு போஸ்டர் ஒட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.
அதாவது அப்போஸ்டரில் “சோழர்களே! பாண்டிய நாட்டுக்கு வந்தோமா, மீனாட்சியை கும்பிட்டோமா, தியேட்டரில் படத்தை ஒட்டினோமா, பரோட்டாவைத் திண்டோமான்னு போய்கிட்டே இருக்கணும், அதை விட்டிட்டு மறுபடியும் ஏதாவது எசக்கு பிசக்கா பண்ணனும் என்று நினைச்சீங்க அப்புறம் அவ்ளோ தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ரைட்டு 🤣🤣🤣🤣 pic.twitter.com/IxuULt5aUo
— James Stanly (@JamesStanly) September 30, 2022
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் உட்படப் பொதுமக்கள் அனைவரும் கோபப்படாமல், விழுந்து விழுந்து சிரித்து வருகின்றார்கள்.
0
0