வாத்தியாக வரும் அஜித்… மாணவனாக பிக் பாஸ் புகழ் : #AK61 குறித்து வெளியான சூப்பர் தகவல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2022, 11:09 pm
Ajith 61 - Updatenews360
Quick Share

அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவை குவித்துள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான படம், வெகுநாள் கழித்து அஜித் படம் என்பதால் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்ஆக அமைந்தது.

குடும்பத்தினர் கொண்டாடும் படமாக வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் மீண்டும் ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணியுடனே அமைந்தது.

Ajith Kumar's 'Valimai': Watch First Trailer for Indian Blockbuster -  Variety

அடுத்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். இந்த நிலையில் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil 3 fame actor Kavin's new look leaves fans in complete awe;  see pic - Times of India

அஜித்தின் 61வது படத்தில் பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் இணைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவர், பின்னர் லிப்ட் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Kavin to star in a comedy-drama Oorkuruvi next | Tamil Movie News - Times  of India

முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் அஜித்தின் 61வது படத்தில் அஜித் பேராசிரியராக நடிக்க உள்ளார். இவருடைய மாணவனாக கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் வெளியானதும் அஜித் ரசிகர்கள், கவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே 61வது படத்தில் அஜித்தின் கெட்டப் வெளியான நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களும் வெளியாவதாக ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Views: - 634

2

0