புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா? முதலமைச்சர் நாராயணசாமி விளக்கம்!!

14 January 2021, 4:12 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி : சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பரவும் தகவல் வதந்தி என முதலமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் எதிர் வரும் 2021ஆம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமியிடம் வழங்கியதாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் உறுதிபடுத்தாத தகவலை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் தொடர்ந்து 25 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாரவுக்கு விரைவில் சட்டமன்றத்தில் பாராட்டு விழா நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவக்காப்ப்பீட்டு திட்டத்திற்கு மத்திய மத்திய தேசிய சுகாதார நிறுவனம் அனுமதியளித்துள்ளதாகவும் இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறமுடியும் என முதலமைச்சர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 13

0

0