சொந்த பந்தத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம்.. அண்ணியவே கொலை செய்து காட்டுக்குள் வீசிய கொழுந்தன்… அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 4:49 pm
Quick Share

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த அண்ணன் மனைவியையே கொலை செய்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொழுந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரக்கோட்டை கோழிக்கான பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன். இவருடைய மனைவி சுலோச்சனா (வயது 65). கோபிநாதன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்த தருவாயில், அவருடைய மகள் விந்தியா மற்றும் தாயுடன் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாய் சுலோச்சனா விந்தியாவை திருமணம் செய்து கொடுத்து அவர் தன் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருவதால், சுலோச்சனா மட்டும் தனது சொந்த கிராமத்தில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

தனிமையில் இருந்த சுலோச்சனாவிற்கு ஆதரவாகவும், அனைத்து விஷயங்களையும் அவர் கணவரின் தம்பி செந்தில் குமார் என்பவர் செய்து வந்துள்ளார். இவர்களுக்கிடையே பெரிய அளவில் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 1ம் தேதியன்று சுலோச்சனாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட விந்தியா, செல்போன் என் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், பயந்து போய் திருப்பூரில் இருந்து தாயின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அக்கம் பக்கத்தில் விசாரித்த பொழுது சுலோச்சனா பற்றிய தக்க தகவல் தெரியாததால், பதறிப் போய் மணமேல்குடி காவல் நிலையத்தில் சுலோச்சனாவை காணவில்லை என்று கூறி கடந்த மூன்றாம் தேதி புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட மணமேல்குடி காவல் துறையினர் சுலோச்சனா பற்றிய தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இது சம்பந்தமாக சுலோச்சனாவின் செல்போன் நம்பர் வந்த அழைப்புகளை வைத்து சோதனை செய்ததில், கடைசியாக சுலோச்சனாவின் கொழுந்தனார் ரமேஷ் இடம் அவர் பேசியதும், அவர்கள் இருந்த இடம் கட்டுமாவடி அடுத்த சோமநாதப்பட்டினம் கடற்கரை பகுதியை ஒட்டியதால் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

சோமநாதப்பட்டினம் கடற்கரை ஓரமாக இருந்த காட்டுக்குள்ளே ஒரு பெண் சடலம் அழுகிய நிலை இருப்பது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், ரமேஷின் நண்பர் செந்தில்குமார் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர் தெரிவித்ததாவது, ரமேஷ்க்கும், செந்தில் குமாருக்கும் கடந்த 10 வருடங்களாக பணம் கொடுக்கல், வாங்கல் இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே ஏற்பட்ட மனகோபத்தால் சுலோச்சனாவை கொலை செய்ய திட்டம் தீட்டிய ரமேஷ், கடந்த ஒன்னாம் தேதி மாலை சோமநாத பட்டிணம் கடற்கரைக்கு கூட்டி வந்து அவரை கட்டையால் தலையில் தாக்கியுள்ளார்.

மயக்க நிலையில் இருந்த சுலோச்சனாவை இழுத்துச் சென்று புதர்கள் நிறைந்த பகுதியில் வைத்து கத்தியால் அவரது வாய் மற்றும் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த சுலோச்சனா சம்பவ இடத்திலேயே உயிர் இறந்துள்ளார். மேலும், சுலோச்சனாவின் கழுத்தில் இருந்த நாலு பவுன் தாலிச் செயினையும், காதில் இருந்த அரை பவுன் தோடுகளை எடுத்துக் கொண்டு, ரமேஷ் சென்று விட்டதாகவும், அதிலிருந்து ரமேஷ் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.

இந்நிலையில் செந்தில்குமாரை கைது செய்த காவல்துறையினர், அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 325

0

0