செல்போன் கடையில் கட்டு கட்டாக காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் : கல்வி அதிகாரிகளின் மெத்தனம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2022, 4:48 pm
Eza Q Paper in cell Phone Store - Updatenews360
Quick Share

செல்போன் கடையில் அரசு காலாண்டு தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பான வீடியோ கட்சி வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமங்களில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளில் இன்று நடைபெறும் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் வத்தலகுண்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த விவகாரம் தற்போது வீடியோ காட்சியுடன் அம்பலம் ஆகியுள்ளது.

கடந்த காலங்களில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் தமிழக முழுவதும் பொது வினாத்தாள் அச்சடிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது.

ஆனால் இந்த ஆண்டு நேரமின்மை காரணமாக நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாளை மாவட்ட கல்வி அலுவலகம் தயாரித்து அதனை பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம் மூலம் பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும்படி பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.

இதில் எந்த குளறுபடியும் வராமல் எச்சரிக்கையுடன் இருக்கும் மாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு செல்ல உள்ள வினாத்தாள்கள் வத்தலக்குண்டில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் கொடுக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஆசிரியர்களை அந்த கடையில் வந்து எடுத்துச் சொல்லுமாறு சொல்லப்பட்டுள்ளது.

அரசு வினாத்தாள்கள் ஒரு தனியார் செல்கடையில் இருப்பதைக் கண்டு ஆசிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். வினாத்தாளை பெற்றுச் சென்ற சில மலை கிராம ஆசிரியர்கள் அதில் பல வினாத்தாள்கள் இல்லாமல் இருப்பதை கண்டு திருப்பி அதே கடையில் சென்று கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது சம்பந்தமாக தவறு செய்த கல்வி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 352

0

0