தி.மு.க.வின் புதிய பொறுப்பாளர்களான துரைமுருகன், டி.ஆர். பாலுவுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..!

3 September 2020, 8:26 pm
Quick Share

தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானதை தொடர்ந்து, அப்பதவிக்கு புதிய பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு எழுந்தது. இந்தப் பதவிக்கு மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, கட்சியின் அதிகாரமிக்க இரு பதவிகளை நிரப்புவதற்காக வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தி.மு.க.வின் முக்கிய இரு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரு தலைவர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0