பண்டல் பண்டலாக பணத்தை காரில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஆர்.டி.ஓ : போலீசார் அளித்த “ஷாக்“!!
20 November 2020, 1:45 pmகன்னியாகுமரி : மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் பெருமாளை லஞ்ச ஒழிப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத 1, 60,000 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் சகஜமாக நடைபெறுவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவில், மார்தாண்டம் ஆகிய இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் பெருமாள், வாகன பதிவு போன்றவைகளுக்கு பணம் வசூல் செய்ததாகவும் அந்த பணத்துடன் மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லைக்கு அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த பெருமாளின் காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரது காரில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத்தொடர்ந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணத்திற்கான கணக்குகள் எதுவும் அவரிடம் இல்லை.
இதனைத் தொடர்ந்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
0
0