தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட்? வானிலை ஆய்வு மையம் தகவல்!!

13 May 2021, 3:03 pm
Red Alert - Updatenews360
Quick Share

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கூறப்பட்டிருந்த நிலையில நாளை முதல் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

14ஆம் தேதியில் கோவை, தேனி , திண்டுக்கல், கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் 40 கிமீ வேகத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் அதி கனமழையும், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாப்புள்ளதாகவும், அரபிக் கடலில் 50 கிமீ முதல் 60 கிமீ வரை சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டா

Views: - 119

0

2