வாடகை கடை விவகாரம் : நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது ஐ.ஜி.,யிடம் புகார் அளித்த பெண்!!

7 November 2020, 7:56 pm
Rent House Issue - Updatenews360
Quick Share

கோவை: வாடகைக்கு அறை எடுத்து மளிகை கடை நடத்தி வந்த தன்னை கடை உரிமையாளர் தாக்கியதாகவும் இதற்கு போலீசார் உறுதுணையாக இருந்ததாகவும் கூறி பெண் ஒருவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 26). இவர் அதே பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து அதில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடை உரிமையாளர் வாடகை பணத்தை அதிகமாக தரக்கோரி வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதற்கு ஜெயஸ்ரீ மறுக்கவே கடை உரிமையாளர்கள் ஜெயஸ்ரீயின் கடையை அடித்து நொறுக்கியதோடு கடையில் இருந்த பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜெயஸ்ரீ துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக ஜெயஸ்ரீ குற்றம் சாட்டுகிறார்.

இந்த நிலையில் போலீசார் மீதும் தன்னை தாக்கிய கடை உரிமையாளரான புவனேஸ்வரி என்பவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் ஜெயஸ்ரீ புகார் அளித்துள்ளார்.

Views: - 25

0

0