திருப்பூரில் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பு : இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்!!
21 January 2021, 7:56 pmதிருப்பூர் : சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தமிழக போக்குவரத்து துறை சார்பில் ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய இருசக்கர வாகன ஊர்வலத்தினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் , சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
0
0