கோவையில் தரமற்ற கையுறை விற்பனை : மோசடி செய்த பெண் தொழிலதிபருக்கு ஜாமீன் மறுப்பு!!
2 February 2021, 10:14 amகோவை : கையுறை விற்பனை செய்து ஒரு கோடி மோசடி செய்த பெண் தொழிலதிபர் ஜாமீன் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோவை கவுண்டம்பாளையத்தில் புளு ஆர்ச் சிட்ஸ் என்ற கையுறை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக இயக்குனராக கீதா அகர்வால் (வயது 31), இயக்குனராக, பாலாஜி ஆகியோர் ஹைதராபாத்தை சேர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான கையுறையை விற்பனை செய்தனர்.
கையுறை தரமற்றதாக இருந்ததால் திருப்பி அனுப்பிய ஹைதராபாத் நிறுவனம், பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது மறுத்ததால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரித்து கீதா அகர்வால், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். கீதா அகர்வால் ஜாமீனில் விடுவிக்க கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் நேற்று செய்தனர். விசாரித்த நீதிபதி சக்திவேல் ஜாமீன் மனுவை மீண்டும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
0
0